"ஈபிஎஸ்க்குதேவைப்பட்டால் கூவத்தூர் ஆதாரங்களை வெளியிடுவேன்" கருணாஸ் பரபரப்பு பேட்டி
பச்சை பொய் சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டால், கூவத்தூர் ஆதரங்களை வெளியிடுவேன் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். சிவகங்கை அருகே பனங்காடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக என்ற எக்கு கோட்டையை எடப்பாடி பழனிச்சாமி மக்கியக் கோட்டையாக மாற்றி வருவதாக விமர்சித்தார்