"மலையாளதிரைப்படங்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்"

Update: 2025-05-29 12:26 GMT

25 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத் திரைப்படங்களுக்கு எதிராக பேசியதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தக் லைஃப் திரைப்படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், தனக்கு கேரளாவிலும் சொந்த வீடு உள்ளது.... ஏராளமான நண்பர்கள் உள்ளதாக தெரிவித்தார். 25 ஆண்டுகளுக்கு முன்பு மலையாள திரைப்படங்கள் மீதான கோபத்தில் பல கருத்துக்கள் தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது தேசிய, சர்வதேச அளவுக்கு மலையாள திரைப்படங்கள் சென்றுள்ளன....அவ்வாறு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் பேசியதாகவும், அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்