"மூச்சு திணறல் சிகிச்சைக்கு போனா பார்வையே போச்சு" - அதிர்ச்சி புகார்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு பார்வை இழப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமத்திற்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததாலேயே தனக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.