``R.K.செல்வமணியின் முதல் மனைவி நான் அல்ல..'' - ட்விஸ்ட் அடித்த நடிகை ரோஜா
ஆர்.கே.செல்வமணியின் முதல் மனைவி ஃபெப்சி தான் என்று நடிகையும், ஆர்.கே.செல்வமணியின் மனைவியுமான ரோஜா தெரிவித்தார். ஃபெப்சி அமைப்பின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் மே தின விழா நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரோஜா, ஃபெப்சி தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள பிஎஃப் - இஎஸ்ஐ திட்டத்திற்கு, தான் 5 லட்சம் ரூபாய் வழங்குவதாக கூறினார்.