Hyderabad | Protest | தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்.. திடீர் பரபரப்பு
பிஆர்எஸ் தொண்டர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்
ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பாரத ராஷ்டிர சமிதி தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்பு வழக்கில் விசாரணைக்காக பாரத ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ் விசாரணைக்கு ஆஜரானார். அவரை இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வேண்டுமென்றே சிக்க வைத்ததாக கூறி, பாரத ராஷ்டிர சமிதி தொண்டர்கள் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.