கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டு இருந்த பைக்கில் இருந்து 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருடிய சம்பவத்தில் செல்வம் உள்ளிட்ட 2 பேர் கைதாகினர். கைதான செல்வம் பணத்தை தனது மனைவியிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்த நிலையில், கணவன் கொடுத்த வாக்குமூலத்தை அறியாத மனைவி கவி மஞ்சு, கணவனை ஜாமின் எடுக்க வந்துள்ளார். அப்போது, கவி மஞ்சுவை கைது செய்த போலீசார், பணம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்