Husband car chasing | மனைவி காரை புயல் வேகத்தில் Chasing செய்த கணவன் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-06-25 05:16 GMT

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, பிரிந்து வாழும் மனைவியின் காரை பின் தொடர்ந்து சென்று கணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது அப்துல்காதர், சரபுநிஷா தம்பதி. இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சரபுநிஷா தனது கணவனை பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மகளின் மாற்றுச் சான்றிதழை வாங்க பள்ளிக்கு வந்த சரபுநிஷாவை, கணவர் முகமது அப்துல் காதர் தனது காரில் பின் தொடர்ந்து சென்று, தடுத்து நிறுத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முகமது அப்துல் காதர் தலைமறைவாகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்