Vellore | Snake | மனைவியை கடித்த பாம்பு.. தேடி பிடித்து கையோடு தூக்கி ஓடிவந்த கணவரால் பரபரப்பு

Update: 2025-11-27 10:24 GMT

வேலூர் குடியாத்தம் அருகே மனைவியை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த கணவரால் பரபரப்பு ஏற்பட்டது. போடிபேட்டை பகுதியை சேர்ந்த உமாதேவி என்ற பெண்ணை வீட்டில் இருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதனால் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் தர்மபிரகாஷ், பாம்பை தேடி கண்டுபிடித்து, அதை உடன் எடுத்து கொண்டு மனைவியை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்