நொடிபொழுதில் ஒன்றாக பிரிந்த கணவன் - மனைவி உயிர் திருவண்ணாமலை அருகே பேரதிர்ச்சி

Update: 2025-08-04 13:07 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . ஜமுனாமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் - பரிமளா தம்பதி மற்றும் உறவினர் குப்பு ஆகிய மூவரும் தங்களது நிலத்தில் விளைந்த பயிரை வியாபாரம் செய்துவிட்டு டிராக்டரில் வீடு திரும்பி உள்ளனர் . அப்போது வேடந்தோப்பு கிராமம் அருகே வந்தபோது ஓட்டுநர் கோபியின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுநர் கோபி கீழே குதித்து உயிர் தப்பிய நிலையில் குப்பன், பரிமளா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .  

Tags:    

மேலும் செய்திகள்