- சென்னை, ஆவடி அருகே காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்த நிலையில், கணவன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் ரூபி. இவரது மகன் தீனதயாளன், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த லாஜியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், லாஜியா, தீனதயாளனுடன் வாழ மறுத்து, தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சமாதானம் செய்ய சென்ற தீனதயாளனை, லாஜியா உதாசீனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தீனதயாளன், மனைவி லாஜியாவின் கண்முன்னே, அருகில் இருந்த பாலத்தின் மீதிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.