வீடு புகுந்து VAOமீது தாக்குதல் - ராசிபுரத்தில் மணல் Mafia அட்ராசிட்டி?
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மணல் கடத்தலை தட்டிகேட்டதால், வீடு புகுந்து தன்னை ஒருவர் தாக்கியதாக விஏஓ அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெஞ்சனூர் பாலமேடு கிராம நிர்வாக அலுவலரான சிவகாமி, காட்டுபாளையம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின்பேரில் விசாரிக்க சென்றபோது, அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிவகாமி வீட்டிற்கு சென்றதை தொடர்ந்து, சீனிவாசன் என்பவர் வீடு புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சிவகாமி ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சீனிவாசனை போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.