உஷார் இல்லாமல் தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் - ஓசூரை அதிரவிட்ட நக்கலய்யா கொலை

Update: 2025-03-31 04:16 GMT

ஓசூர் அருகே, அண்ணனே தனது தம்பியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தளி பகுதியை சேர்ந்தவர் நக்கலய்யா. யுகாதி பண்டிகைக்காக சொந்த ஊரான லட்சுமிபுரம் சென்றிருந்த நக்கலய்யாவை, மது போதையில் இருந்த அவரது அண்ணன் சின்னய்யா அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். நக்கலய்யாவின் இரண்டு குழந்தைகளும் அவரது தாய் வீட்டில் வளர்ந்து வந்துள்ளன. இதில் சின்னய்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கொலைச் சம்பவம் நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்