Hosur News | Harassment | மாணவிக்கு பாலியல் தொந்தரவு - காப்பக தாளாளர் உள்பட 5 பேர் கைது
ஓசூரில் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கி படித்து வந்த 9 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காப்பகத்தின் தாளாளர் கைது செய்யப்பட்டார். மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவருடைய தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, நடந்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில், காப்பகத்தின் தாளாளர் ஷாம் கணேஷை போலீசார், கைது செய்தனர். இந்த சம்பவத்தில், உண்மையை மறைத்து, கட்டப் பஞ்சாயத்து செய்ததாக தாளாளரின் மனைவி, காப்பக ஆசிரியை மற்றும் மேலும் இருவர் என மேலும் நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். காப்பகத்திலிருந்த மற்ற 33 மாணவ, மாணவிகளும் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.