சிவகங்கையில் 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு செப்,11 விடுமுறை - வெளியான அறிவிப்பு

Update: 2025-09-09 10:50 GMT

தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ஒட்டி, கீழடி அருங்காட்சியகம் மற்றும் மாவட்டத்தின் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உள்ளார். இம்மானுவேல் சேகரனின் 68-வது நினைவு நாள் செப்டம்பர் 11ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்த சூழலில், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவையை பாராமரிப்பது காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், செப்டம்பர் 11ம் தேதி கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்