"கையில் தாங்க,ஜிபேயில் அனுப்புறேன்... இப்படி சொன்னால் உஷார்" - சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்

Update: 2025-08-29 16:01 GMT

"கையில் தாங்க,ஜிபேயில் அனுப்புறேன்... இப்படி சொன்னால் உஷார்" - சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்

சென்னை அரும்பாக்கம் பகுதியில், அவசரமாக கையில் பணம் வேண்டும் எனக் கூறி, ஜிபேயில் உடனடியாக பணம் அனுப்புவதாக ஏமாற்றும் கும்பலிடம் இருந்து உஷாராக இருக்கும்படி, கார் ஓட்டுநர் ஒருவர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். கார் ஓட்டுநர் ஒருவரிடம், 200 ரூபாய் ஜிபேயில் அனுப்புகிறேன், கையில் பணம் தாருங்கள் என ஒரு இளைஞர் அணுகியுள்ளார். பணம் கொடுப்பதற்காக ஓட்டுநர் பர்சை எடுத்த நிலையில், அதிலிருந்த, 500 ரூபாய் தாளை பார்த்த இளைஞர் 500 ரூபாயாக தந்தால் 30 ரூபாய் சேர்த்து அனுப்புகிறேன் என கூறியுள்ளார். ஆனால் அனுப்பிய பணம் வந்து சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார் ஓட்டுநர், இளைஞரிடம் விசாரணை செய்ய காரை விட்டு இறங்கிய போது, மோசடி இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சைபர் கிரைம் போலீசார் இந்த சம்பவத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்