சென்னையில் தமிழ்நாடு ரெட்டி ஜன சங்கம் சார்பில் நடந்த 'ரெட்டி குல மன்னர்கள் வரலாறு' நூல் வெளியீட்டு விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். நூலை தமிழ்நாடு ரெட்டி ஜன சங்க மாநில தலைவர் ஜெயராமன் ரெட்டியார் வெளியிட்டார். சிறப்பு விருந்தினராக ஜி.வரதராஜன் ரெட்டியார், MLA ஈஸ்வரன், தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், இந்த நூலை ரெட்டி குல மக்களின் ஆணிவேர்களை தேடி அறியப்பட்ட ஒரு பொக்கிஷம் எனவும், இதுதான் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருந்து தான் 'தமிழ் ரெட்டி இனம்' தோன்றியதற்கான ஆதாரம் எனவும், ரெட்டி குல மக்கள் வரலாற்றில் ஆற்றிய சிறப்புகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டு இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தனர்.