அதிக ஒலி எழுப்பான்களுடன் கனரக வாகனங்கள் - அபராதம் விதித்த அமைச்சர்

Update: 2025-09-10 10:17 GMT

காதை பிளக்கும் அளவிற்கு அதிக ஒலி எழுப்பிய கனரக வாகனங்களை நிறுத்தி ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக சம்பந்தபட்ட வாகனங்களக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டார். சேலத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் சிவசங்கர் சொந்த ஊரான அரியலூர் திரும்பும் வழியில், திடீரென கனரக வாகனங்களை நிறுத்தி நவீன ஒலி அளவீட்டு கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.ஒலியின் அளவு 90 என இருக்க வேண்டிய நிலையில் பரிசோதித்த அனைத்து வாகனங்களிலும் 106, 107, 108 என இருந்ததால் அந்த ஒலி எழுப்பான்களை உடனடியாக அகற்ற அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்