Heavy rain in nagapattinam || மின்கம்பங்களை சூறையாடிய ஆக்ரோஷ மழை - கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

Update: 2025-08-09 02:32 GMT

Heavy rain in nagapattinam || மின்கம்பங்களை சூறையாடிய ஆக்ரோஷ மழை - கடும் அவதிக்குள்ளான பொதுமக்கள்

நாகபட்டினம் மாவட்டத்தில் வடுகச்சேரி, ஒரத்தூர், வடவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால், ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் இரண்டு மின்கம்பங்கள் அடியோடு வயலில் சரிந்தன. சூறைகாற்றால் 5 கிராமங்களில் மின் கம்பிகள் அறுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்