சுட்டெரிக்கும் வெப்பம்.. சாலையின் நடுவே நடந்த திடீர் மாற்றம்.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Update: 2025-03-09 10:26 GMT

கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வரையில், சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா நகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் பசுமை பந்தல் அமைப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, உயரம் அதிகமாக இருந்த காரணத்தால் கிழியக் கூடிய சூழல் உருவானதாகவும், அதனால் இந்த ஆண்டு அதன் உயரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்