கொதித்த தண்ணீர் -படுக்கை அறையிலேயே பறிபோன உயிர்..சென்னையில் அதிர்ச்சி | Heater | Chennai | ThanthiTV
சென்னை வடபழனியில் வெந்நீரில் குளிப்பதற்காக ஹீட்டர் ஃபிளக் போடும்போது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடபழனி தரண்சிங் காலனி மூன்றாவது தெருவில் வசித்து வந்த ஆமோஸ், மின்சாரம் தாக்கியதில் படுக்கை அறையிலேயே சரிந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அவரது சகோதரி ஆமோஸை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது மயக்க நிலையில் இருந்த ஆமோஸ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.