நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா
உள்ளிட்ட மாநிலங்களும், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் வடபகுதிகளும் இயல்பை விட அதிகமான வெப்பநிலையை கொண்டிருக்கும் எனவும் கூறியுள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாதம் வரை கடும் வெப்ப அலை வீச கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.