உயிரை பணயம் வைத்து.. சாலையில் நிற்காமல் பறந்த இதயம்

Update: 2025-02-28 04:55 GMT

"சென்னையில் ஒரு நாள்" திரைப்பட பாணியில், மதுரையில் இருந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து இதயம் கொண்டு வரப்பட்டது. பல்லடம் பகுதியில் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் உதவி செய்தனர். உயிரை பணயம் வைத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்