நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் போன் மூலம் எளிதில் அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுவரை16 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியிருப்பதாகவும், பட்டா உள்ளிட்ட விவரங்களை மக்கள் எளிதில் பெற புதிய செயலி இந்த ஆண்டிற்குள் நடைமுறைப்படுத்தும்.