Govt Bus | பஸ் பயணிகளுக்கு... டிக்கெட்டில் இப்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும்
பஸ் பயணிகளுக்கு... டிக்கெட்டில் இப்படி முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அரசு பேருந்துகளில் டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்கப்படுத்தும் வகையில் போக்குவரத்து கழகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இது தொடர்பாக அனைத்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி, நகர் மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முடிந்தளவு பணம் இல்லாத பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பாயிண்ட்-டு-பாயிண்ட் பேருந்துகளில் பணமில்லாத பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளித்து கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் மீண்டும் ETM கருவிகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் ETM கருவியை திரும்ப பெற்று வேறு சிலருக்கு ஒதுக்கும் சூழல் ஏற்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.