பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என ஜம்மு கஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை நேரில் சந்தித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத தளங்களை அழித்ததை உலகம் முழுவதும் அறியும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய அரசும் ஜம்மு & காஷ்மீர் நிர்வாகமும் துணை நிற்கும் என்று கூறிய அவர், இறந்தவர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.