Tamilnadu GH Doctors | அரியவகை இதயநோய் பாதிப்பு - பெண்ணை மீட்டு அரசு மருத்துவர்கள் சாதனை

Update: 2025-11-19 06:59 GMT

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள், கோடியில் ஒருவருக்கு வரகூடிய அல்கபா(ALCAPA) இதய நோய்க்கு ஆளான பெண்ணை, அறுவைசிகிச்சை செய்து காப்பாற்றினர். 40 வயதான பாண்டியம்மாளுக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அல்கபா(ALCAPA) இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றினர். தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இந்நோயல் பாதிக்கப்பட்டவரின் உயிர், காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்