செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை தள்ளிச் செல்லும் அவல நிலைக்கு பயணிகள் ஆளாகினர். மதுராந்தகத்திலிருந்து ஒரத்தி கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து, மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாரானது. அப்போது பேருந்து பழுதாகி நின்றதால், அதில் அமர்ந்திருந்த பணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் கீழே இறங்கி பேருந்தை தள்ளினர்.