சேலத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை, சிலர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பேருந்தில் பயணித்த பெண்ணை, சகப் பயணி ஒருவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட இளம்பெண் உறவினர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் உறவினர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து கிண்டல் செய்த பயணி தப்பி ஓடிய நிலையில், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டுனர், நடத்துனர் ஆகிய இருவரையும், பெண்ணின் உறவினர்கள் கடுமையாக தாக்கிய நிலையில் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.