Ramanathapuram Issue | கண்ணில் பட்ட அரசு பேருந்து, கார்கள் கண்ணாடி உடைப்பு - தீயாய் பரவும் வீடியோ

ராமநாதபுரத்தில் அரசு பேருந்து, கார் கண்ணாடி உடைப்பு - எஸ்.பி.யிடம் புகார்;

Update: 2025-11-05 06:28 GMT

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் அரசு பேருந்து மற்றும் கார் கண்ணாடிகளை உடைத்த நபர்கள் குறித்து எஸ்.பி.யிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இளையான்குடி அருகே இளமனூர் கிராமத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் சிலர் சத்திரக்குடி வழியாக சென்ற வாகனங்களின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். அதன்படி பரத், முல்லைவேந்தன், ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, எஸ்.பி. சந்தீஷிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்ட வீடியோ சமூக வலைதளகளில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்