வந்தே பாரத் ரயில்களில் இருக்கைகள் காலியாக இருந்தால் வழியில் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள பயணிகள் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயண சீட்டு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 8 வந்தே பாரத் ரயில்களில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவில், நாகர்கோவில்- சென்னை எழும்பூர், மதுரை - பெங்களூரு, மங்களூரு - திருவனந்தபுரம், திருவனந்தபுரம் - மங்களூர், கோயம்புத்தூர் - பெங்களூரு, மங்களூரு - கோவா மட்கான், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயில்களில் இந்த புதிய வசதி மூலம் மக்கள் பயணிச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.