குமரி போலீசாருக்கு குட் நியூஸ் - வரப்பிரசாதமாக வந்த App..

Update: 2025-07-12 11:04 GMT

தமிழ்நாட்டில் முதல்முறையாக கன்னியாகுமரியில் காவலர்கள் வார விடுமுறையை எளிதாக பெறுவதற்காக Rest App என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. காவலர்களுக்கு வார விடுமுறை சரியாக வழங்கப்படவில்லை என புகார் எழுந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களால் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. காவல்துறையில் பொருத்தப்பட்டிருக்கும் க்யூ ஆர் கோடை இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்து காவலர்கள் வார விடுமுறையை விண்ணப்பித்து கொள்ளலாம் என காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் மூலம் விடுமுறை எடுப்பதில் ஏற்படும் குளறுபடிகள் தவிர்க்கப்படும் என அவர் தெரிவித்தார். இந்த ஆப் காவலர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்