கடையநல்லூரில் பூமார்க்கெட்டில் கிடந்த 26 கிராம் தங்க செயினை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வாரச்சந்தையில் 26 கிராம் தங்க செயின் கீழே கிடந்துள்ளது. அதனை எடுத்த பாம்பு கோயில் கிராமத்தை சேர்ந்த மேத்தப்பிள்ளை என்பவர், சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின் அது உரிமையாளரான மீனாட்சிபுரம் கனகராஜ் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.