Gold | இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு இத்தனை லட்சம் கோடியா? - மிரளும் உலகம்

Update: 2025-10-29 15:39 GMT

இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு இத்தனை லட்சம் கோடியா? - மிரண்டு பார்க்கும் உலக நாடுகள்

இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 286 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது.

தங்கத்தில் முதலீடு செய்வது இந்திய குடும்பங்களில் பாரம்பரிய வழக்கமாகவே இருக்கிறது.

தங்கம் விலை எத்தனை உச்சம் தொட்டாலும், இந்தியாவில் தங்க நகை விற்பனையும் உச்சத்தை எட்டித்தான் வருகிறது.

இந்திய குடும்பங்களில் மட்டும் மொத்தமாக சுமார் 24 ஆயிரம் டன் தங்கம் கையிருப்பு இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இது உலக தங்க இருப்புகளில் 11 சதவீதம் இந்திய குடும்பங்களில் நகையாக இருக்கிறது.

இதுவே இந்திய ரிசர்வ் வங்கியிடம் 880 டன் தங்கம் மட்டுமே ரிசர்வாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியைவிட இந்திய குடும்பங்களில் தங்கம் அதிகமாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் இருந்து தங்கத்தின் மதிப்பு 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதை வைத்து கணிக்கும் போது இந்திய குடும்பங்களில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 3.24 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது என Systematix Research ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, இந்திய ரூபாயில் 286 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது என மதிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்