குப்பையில் கிடைத்த தங்க சங்கிலி - பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளர்

Update: 2025-05-20 02:19 GMT

சேலத்தில் குப்பைத் தொட்டியில் கிடைத்த தங்கச் சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் மணிவேல். இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது, பன்னிரெண்டரை சவரன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.

சங்கிலி கிடைத்தது தொடர்பாக தனது மேற்பார்வையாளரிடம் அவர் தெரிவித்தார். பின்னர், மாமன்ற உறுப்பினர் பிரதீப்பின் உதவியுடன், அந்த நகையை போலீசாரிடம் மணிவேல் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, நகையை தவறவிட்டவரிடம் அந்த நகை ஒப்படைக்கப்பட்டது. தூய்மை பணியாளரின் நேர்மையான செயலுக்கு நகையின் உரிமையாளர் நன்றி தெரிவித்ததோடு, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்