7 அடி நீளமுள்ள டால்ஃபின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது
நாகை மாவட்டம் கோடியக்கரை புதிய கலங்கரை விளக்கம் அருகே 7 அடி நீளத்தில் சுமார் 150 கிலோ எடையுள்ள ஆண் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த டால்பினை மீட்டு அதன் இறப்பு குறித்து ஆய்வு செய்தனர். இறந்த டால்பின், கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.