`கஞ்சா விருந்து’ வைத்த புது மாப்பிள்ளை - ரூமில் வைத்து 10 பேருடன் கைது..

Update: 2025-07-14 06:16 GMT

கஞ்சா பார்ட்டி வைத்த புதுமாப்பிள்ளை உட்பட 10 பேர் கைது

சென்னையில், கஞ்சா பார்டியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை உட்பட 10 பேரை கைது செய்து, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர விடுதியில் கஞ்சா பார்ட்டி நடைபெறுதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ் என்பவர் தனது திருமணத்தை முன்னிட்டு, கஞ்சா பார்ட்டி வைக்க திட்டுமிட்டு, அதன்படி விடுதியில் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்துள்ளார். சம்பவத்தன்று சந்தோஷ் அவரது நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து, ஓஜி கஞ்சா மற்றும் சாதாரண கஞ்சா உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளனர். இதில், 5 கிராம் ஓஜி கஞ்சாவானது, விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஐஸ்வர்யா என்பவர் தந்துள்ளார். சாதாரண கஞ்சாவை ஆவடியை சேர்ந்த பீவன் ஆரோக்கியராஜ் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்