Gummidipoondi ரயிலில் பேட்டரி திருடுவதையே தொழிலாக வைத்திருந்த கும்பல் - சிக்கியது
சென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ள அத்திப்பட்டு ரயில் நிலையத்தில், பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் இருந்து 5 பேட்ரிகளை திருடிய திருடன் உட்பட மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். திருவெள்ளைவாயல் பகுதியை சேர்ந்த நாகராஜ், ஸ்ரீனிவாசன் மணிமாறன், உள்ளிட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில், பல்வேறு ரயில்களில் இருந்து 134 பேட்டரிகளை திருடி 2.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரும் பொன்னேரி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.