G Square Short Flim | ஜி ஸ்கொயர் வெளியிட்ட குறும்படம்
ஜி ஸ்கொயர் சார்பில் போதை பொருள் தீமைகள் குறித்த குறும்படம் திரையிடல்
ஜி ஸ்கொயர் மற்றும் கிரேஸ் அறக்கட்டளை இணைந்து சென்னையில் பள்ளி மாணவ மாணவியர்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை திரையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், 180 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், மது மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கிரேஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான டாக்டர் ஆதிரா நேவிஸ் பிரபாகர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதை தொடர்ந்து மது மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.