திருச்செந்தூர் முருகன் கோயிலில் 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கான தனி வரிசையில் பக்தர்கள் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது மூத்த குடிமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கோயில் நிர்வாகம் அந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.