இலவச ஏசி வழங்க இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை என மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஏசி யோஜனா திட்டம் என்கிற பெயரில் புதிய திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டிருப்பதாகவும் இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு 5 ஸ்டார் ஏசி இலவசமாக வழங்கப்பட இருப்பதாகவும் பல்வேறு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தகவல் போலியானது எனவும் மத்திய மின்துறை அமைச்சகத்தால் அப்படி எந்த விதமான திட்டமும் தொடங்கப்படவில்லை எனவும் மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழு தெரிவித்துள்ளது.