AIADMK Ex Councilor | அதிமுக முன்னாள் கவுன்சிலர் துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு

Update: 2025-06-26 03:49 GMT

அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு - வெறிச்செயல்

காஞ்சிபுரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரை, சக அதிமுக நிர்வாகி அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெரு சேர்ந்தவர் கண்ணபிரான். முன்னாள் அதிமுக கவுன்சிலரான இவர், அந்தப் பகுதியின் வட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர், தனது வீட்டு வாசலில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மற்றொரு அதிமுக நிர்வாகி சரவணன், திடீரென அரிவாளால் கண்மூடித்தனமாக கண்ணபிரானை வெட்டிவிட்டு தப்பியோடினார். படுகாயமடைந்த கண்ணபிரான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், தப்பியோடிய சரவணனை தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்