தொடர்ந்து 2வது நாள்.. குடும்ப பெண்களுக்கு அதிர்ச்சி செய்தி

Update: 2025-07-22 08:12 GMT

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒரே நாளில் 30 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சிலதினங்களாக வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் தக்காளி விலை 8 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், விலை திடிரென ஒருகிலோ 15 ரூபாயில் இருந்து ரூ.50க்கு உயர்ந்துள்ளது.

இராயகோட்டையில் 25 கிலோ கொண்ட கூடை தக்காளி 750 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தக்காளி விலை உயர்வால் தமிழகத்தில் சேலம், கோவை, சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தக்காளி விலை திடிரென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்