"பணத்திற்காக.." ரீல்ஸ் மோகம் - இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம்

Update: 2025-06-02 02:28 GMT

வெறும் லைக்ஸ் மற்றும் Views-க்காக இளம்தலைமுறையினர் உயிரையே பணயம் வைப்பதாகவும், பணம் கிடைக்கிறது என்பதற்காக பல அற்பத்தனமான விஷயங்களை பலரும் செய்து வருவதாகவும் இயக்குனர் சீனு ராமசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில், "புகையிலைக்கு எதிராக ரீல்ஸ் போடுங்க... ரியல் ஹீரோவா ஆகுங்க" என்ற தலைப்பில் நடந்த போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், புகைப்பழக்கத்திற்கு எதிராக ஒரு திரைப்படத்தை எடுப்பேன் எனக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்