Chennai | crime | உணவு டெலிவிரி ஊழியர் ஓடஓட வெட்டிக்கொலை - சென்னை அசோக் நகரில் பயங்கரம்

Update: 2025-06-22 04:40 GMT

உணவு டெலிவிரி ஊழியர் ஓடஓட வெட்டிக்கொலை - சென்னை அசோக் நகரில் பயங்கரம்

சென்னை, அசோக் நகர் அருகே உணவு டெலிவிரி ஊழியர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஐ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கலையரசன். உணவு டெலிவிரி ஊழியரான இவர், தனது மனைவியின் சகோதரர்களால் ஓட ஓட வெட்டப்பட்டு, கீழ்பாக்கம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் கொலைக்கு காரணமான, கலையரசனின் மனைவி தமிழரசி மற்றும் புளியந்தோப்பு சரவணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்