Flood | திடீரென பாய்ந்த ஆக்ரோஷ வெள்ளம்.. நொடியில் உயிர் தப்பிய நபர்.. பயத்தை காட்டும் காட்சி!

Update: 2025-10-15 07:08 GMT

நொடியில் உயிர்தப்பிய நபர்! நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ.நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி நம்பியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இருந்து நபர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சமவெளிப் பகுதிக்கு யாரும் எதிர்பாராத நொடியில் வெள்ளம் சீறிப் பாய்ந்து வந்தது. ஆற்றில் குளிப்பதற்காக சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் ஆற்றின் அருகே பாறையில் நடந்து செல்கிறார். ஆற்றில் குறைந்த அளவே நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் ஆற்றின் அருகே குனிந்து எதையோ எடுக்க முயற்சிக்கும்போது, திடீரென மலை வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதை சற்றும் எதிர்பாராத அவர், உடனடியாக கரையை நோக்கி ஓடி உயிர் தப்புகிறார். அடுத்த சில நொடிகளில், அவர் நின்றிருந்த பாறைப் பகுதி முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி, ஆறு கரைபுரண்டு ஓடும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்