ஒரே பைக்கில் பறந்த "5 இளஞ்சிட்டுகள்" - பாட்டை போட்டு ஆபத்தான நிலையில் சென்றதால் பரபரப்பு..

Update: 2025-06-17 04:37 GMT

சாலை விதிகளை மீறி ஒரே டூவீலரில் 5 பேர் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சந்தவாசல் முனிவந்தாங்கல் பகுதியில் ஒரே டூவீலரில் 5 பேர் தலைக்கவசம் அணியாமல் ஆபத்தான வகையில் பயணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை உணராமல் கால்களை சாலையில் தேய்த்தவாறு, பாடல்களை ஒலிக்கச்செய்து டூவீலரில் வேகமாக சென்றனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்