இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், சிசிடிவி கேமராக்கள், மெட்ரோ ரயிலில் இருப்பது போன்று ரயில் நிலையங்களுக்கான தகவல் அமைப்பு, சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. முதல்கட்டமாக இரண்டு குளிர்சாதன ரயில்கள் மூலம் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையும், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வரையிலும் 6 சேவைகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் ஒரு நிமிடம் ரயில் நின்று செல்லும் என அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச பயண கட்டணமாக 35 ரூபாயும், அதிகபட்சமாக 105 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.