Fire Accident | Chennai | திடீரென தீ பிடித்து எரிந்து கருகிய குடிசை - மளமளவென பரவிய அதிர்ச்சி காட்சி
மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்த குடிசை வீடு
சென்னை பாடி புதுநகரில் மின்கசிவு காரணமாக, வீட்டின் மாடியில் இருந்த குடிசை முற்றிலும் எரிந்தது. கந்தசாமி என்பவர் வீட்டில் யாரும் இல்லாத போது, திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தீ மளமளவென பற்றியது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால், அருகிலுள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் வீட்டில் இருந்த உடமைகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.