MP மகனுக்கும் வியாபாரிக்கும் நடந்த சண்டை - தேங்காய் சண்டை கேஸில் லாஸ்ட் மினிட் ட்விஸ்ட்
தேங்காய்க்காக சண்டை? - எம்.பி. மகன், வியாபாரி மோதிக்கொண்ட காட்சி
மதுரையில் தேங்காய் பழக்கடை வியாபாரி மற்றும் திமுக எம்.பி மகன் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவத்தில் அக்கடை வியாபாரி சமயமுத்து மன்னிப்பு கோரியுள்ளார். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில், தேனி எம்பியான தங்கத்தமிழ் செல்வனின் மகனும் வழக்கறிஞருமான நிஷாந்தின் குடும்பத்தாரிடம் பூஜைக்காக அழுகிய பழங்களையும், உடைந்த தேங்காயையும் கொடுத்ததால் தகராறு ஏற்பட்டு கைகலப்பானதாக தெரிய வருகிறது. இதில் முதலில், பழக்கடை வியாபாரியும், அவரது மகனான மணிகண்டனும் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, தங்களது தரப்பு புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல், மாறாக தனது கணவரையும், மகனையும் கைது செய்ததாக கூறி, வியாபாரியின் மனைவி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளித்தார். ஆனால், மறுநாளே வெளிவந்த வியாபாரி, 'சிலரின் தூண்டுதலின் பெயரில் தனது மனைவி புகார் அளித்ததாக கூறியது' ட்விஸ்ட் ஆகியுள்ளது. இதுகுறித்த பரபரப்பு சிசிடிவி காட்சி