Fiber boat | நடுக்கடலில் கொழுந்துவிட்டு எரிந்த பைபர் படகு.. சிரமப்பட்டு தப்பித்த சென்னை மீனவர்கள்

Update: 2025-12-24 03:48 GMT

நடுக்கடலில் தீப்பற்றிய சென்னை மீனவர்களின் பைபர் படகு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த, சென்னை மீனவர்களின் பைபர் படகில் திடீரென தீ பற்றியது. திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சென்ற படகின் இஞ்சினில் தீப்பிடித்து, படகு முழுவதும் எரிந்துள்ளது. உடனே மீனவர்கள் கடலில் குதித்த நிலையில், அவ்வழியே சென்ற பழவேற்காடு மீனவர்கள் தங்கள் படகில் ஏற்றி அவர்கள் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதில் ஜெகன் மதியழகன் என்பவர் கையில் தீக்காயம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்